மேலும் 564 பேருக்கு கொரோனா

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 564 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

Update: 2021-05-13 19:42 GMT
விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 564 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. 
3 பேர் பலி
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 564 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 24,688 ஆக உயர்ந்துள்ளது.
 21,117 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 3,299 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். நோய் பாதிப்புக்கு மேலும் 3 பேர் பலியாகியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 274 ஆக உயர்ந்துள்ளது.
தீவிர சிகிச்சை பிரிவு 
 மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் 485 ஆக்சிஜன் கொரோனா சிகிச்சை படுக்கைகளும், 307 ஆக்சிஜன் இல்லாத சிகிச்சை படுக்கைகளும், 105 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளும் உள்ள நிலையில் 441 ஆக்சிஜன் படுக்கைகளும், 168 ஆக்சிஜன் இல்லாத படுக்கைகளும், 95 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளும கொரோனா பாதிப்படைந்தோருக்கு தரப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 193 படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளது.
 கொரோனா சிகிச்சை மையங்களில் 1138 படுக்கைகள் உள்ள நிலையில் 433 படுக்கைகளில் பாதிப்படைந்து அனுமதிக்கப்பட்டுள்ளனர். 705 படுக்கைகள் காலியாக உள்ளன.
பரவலாக பாதிப்பு 
விருதுநகர் கே.கே.எஸ்.எஸ்.என்.நகர், இனாம் ரெட்டியப்பட்டி, ராமகுடும்பன்பட்டி, வீரபத்திரன் தெரு, லட்சுமி நகர், பெரியவள்ளிகுளம், பட்டம்புதூர், அல்லம்பட்டி, பேராளி ரோடு, என்.ஜி.ஓ. காலனி, சங்கரலிங்கபுரம், கூரைக்குண்டு, பாரப்பட்டி தெரு, ராமச்சந்திரன் தெரு, பி.சி.கே.பெரியசாமி தெரு, அனுமன் நகர், பராசக்தி நகர், பாண்டியன் நகர், வ.உ.சி. நகர், அரசு ஆஸ்பத்திரி, பெத்தனாட்சி நகர், அல்லம்பட்டி, முத்துராமன் பட்டி, ஆமத்தூர், கருப்பசாமி நகர், சாஸ்திரி நகர், ஏ.எஸ்.எஸ்.எஸ்.எஸ். ரோடு, கட்டையா புரம் உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
 மேலும் காரியாபட்டி, நரிக்குடி, வீரசோழன், தச்சனேந்தல், நாங்கூர், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, சாட்சியாபுரம், திருத்தங்கல் உள்பட  மாவட்டத்தில் பல்ேவறு பகுதிகளில் பரவலாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்