சிறப்பு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தர்ணா

அரியலூரில் சிறப்பு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-05-14 19:52 GMT
அரியலூர்:
அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாமில் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் உள்ள 60 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் ஆண் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உணவு, குடிநீர், மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று ஆண் வார்டில் தங்கியிருந்தவர்கள் தங்கள் அறைகளில் உள்ள குளியலறை மற்றும் கழிவறை சுத்தம் செய்யப்படவில்லை. உணவு தரமாக இல்லை என்று கூறி முகாமின் நுழைவு வாயிலில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு, ஆர்ப்பாட்டம் செய்தனர்.இது பற்றி தகவல் அறிந்த வருவாய்த்துறையினர், போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கழிவறையை சுத்தம் செய்வதற்கான பொருட்களை வாங்கி கொடுத்து சமாதானம் செய்தனர். மேலும் குறித்த நேரத்திற்கு தரமான உணவு வழங்கப்படும் என்று கூறியதை அடுத்து, அனைவரும் அங்கிருந்து கலைந்து முகாமிற்குள் சென்றனர்.

மேலும் செய்திகள்