மேலும் 623 பேருக்கு கொரோனா

மாவட்டத்தில் மேலும் 623 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பலி எண்ணிக்கை 278 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2021-05-14 20:00 GMT
விருதுநகர், 
மாவட்டத்தில் மேலும் 623 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பலி எண்ணிக்கை 278 ஆக உயர்ந்துள்ளது. 
பலி எண்ணிக்கை உயர்வு 
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 623 பேருக்கு கொரோனாபாதிப்பு உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 25,314 ஆக உயர்ந்துள்ளது.
 21,205 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 3,832 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 
கொரோனா பாதிப்புக்கு மேலும் 5 பேர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 278 ஆக உயர்ந்துள்ளது.
அரசு ஆஸ்பத்திரி 
 மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் உதவியுடனான படுக்கைகள் 477, ஆக்சிஜன் இல்லாத படுக்கைகள் 338, தீவிர சிகிச்சை பிரிவில் 116 படுக்கைகள் உள்ள நிலையில் ஆக்சிஜன் படுக்கைகள் 419, ஆக்சிஜன் இல்லாத படுக்கைகள் 224, தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் 96 ஆகியவற்றில் சிகிச்சைக்காக நோய் பாதிப்பு அடைந்தோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
தற்போதுள்ள நிலையில் மாவட்டத்தில் 58 படுக்கைகள் மட்டுமே அரசு ஆஸ்பத்திரிகளில் காலியாக உள்ளன.
முரண்பாடு 
 மேலும் கொரோனா சிகிச்சை மையங்களில் 1,254 படுக்கைகள் உள்ள நிலையில் 366 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 858 படுக்கைகள் காலியாக உள்ளன. விருதுநகர் லட்சுமி நகர், சுப்பையா பிள்ளை தெரு, அகதிகள் முகாம், வில்லி பத்திரி, செவல்பட்டி, நேருஜி நகர், அகமதுநகர், அல்லம்பட்டி, ஆர்.வி.ஆர். நகர், அம்பேத்கார்தெரு, பெரியசாமி திரு மாணிக்கம் மகால், பாண்டியன் நகர், ஆர்.எஸ்.நகர், பெத்தனாட்சிநகர், ராமமூர்த்தி ரோடு, மேற்கு பாண்டியன் காலனி, சாஸ்திரி நகர், ஆவுடையாபுரம், என்.ஜி.ஓ. காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நோய் பாதிப்பு பரவலாக ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து மாவட்ட, மாநில பாதிப்படைந்தோர் பட்டியல்களில் முரண்பாடு உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் முரண்பாடுகளை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்