மும்பையில் பாதிப்பு தொடர்ந்து குறைகிறது; பரிசோதனை செய்தவர்களில் 5.8 சதவீதம் பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று

மும்பையில் கொரோனா பரிசோதனை செய்தவர்களில் 5.8 சதவீதம் பேருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

Update: 2021-05-16 11:07 GMT

1,447 பேருக்கு பாதிப்பு

தலைநகர் மும்பையிலும் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதில் நேற்று சோதனை செய்யப்பட்ட 24 ஆயிரத்து 896 பேரில் 1,447 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டது. அதாவது சோதனை செய்தவர்களில் 5.8 சதவீதம் பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை நகரில் 6 லட்சத்து 87ஆயிரத்து 152 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதேபோல நகரில் மேலும் 62 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகினர். இதுவரை 14 ஆயிரத்து 200 பேர் தொற்றுக்கு உயிரிழந்து உள்ளனர்.

213 நாட்களாக அதிகரிப்பு

நகரில் தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் நோய் பரவல் இரட்டிப்பாகும் காலம் 213 நாட்களாக அதிகரித்து உள்ளது. மேலும் தொற்று பாதித்தவர்களில் 92 சதவீதம் பேர் குணமாகி உள்ளனர். நகரில் தற்போது 87 கட்டுப்பாட்டு மண்டலங்கள் உள்ளன. 377 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

தாராவியில் நேற்று புதிதாக 13 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்து 684 ஆகி உள்ளது. இதில் தற்போது 511 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்