கறம்பக்குடி பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்

கறம்பக்குடி பகுதியில் இன்று மின்வினியோகம் இருக்காது.

Update: 2021-05-17 17:45 GMT
கறம்பக்குடி, மே.18 -
கறம்பக்குடி துணை மின்நிலையத்தில் பழுதான மின்சாதனத்தை சீரமைக்கும் பணி இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று கறம்பக்குடி ஒன்றிய பகுதியில் மாலை 3 மணி முதல் 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இத்தகவலை கறம்பக்குடி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஆறுமுகம் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்