அந்தியூர் வனப்பகுதியில் வயது முதிர்வால் பெண் யானை சாவு

அந்தியூர் வனப்பகுதியில் வயது முதிர்வால் பெண் யானை இறந்தது.

Update: 2021-05-18 22:36 GMT
அந்தியூர்
அந்தியூர் வனப்பகுதியில் வயது முதிர்வால் பெண் யானை இறந்தது. 
யானை
அந்தியூர் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இது தவிர மான், சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட விலங்குகளும் உள்ளன. அதனால் விலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுக்க வனத்துறையினர் அடிக்கடி ரோந்து செல்வது வழக்கம். 
அதன்படி அந்தியூர் ரேஞ்சர் உத்தர சாமி மற்றும் வனத்துறையினர் நேற்று வனப்பகுதிக்குள் ரோந்து சென்றார். அப்போது தென் பர்கூர் தணக்குமடுவு என்ற இடத்தில் யானை ஒன்று இறந்து கிடந்தது. அதன் அருகே சென்று பார்த்த வனத்துறையினர் உடனே அதுபற்றி மாவட்ட வன அதிகாரி விஸ்மிஜூ விஸ்வநாதனுக்கு தகவல் கொடுத்தனர்.
அஞ்சலி
 இதைத்தொடர்ந்து விஸ்மிஜூ விஸ்வநாதன் உத்தரவுப்படி கால்நடை டாக்டர்கள் அருள்முருகன் சம்பவ இடத்துக்கு சென்றார். இதையடுத்து யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பின்னர் டாக்டர் அருள்முருகன் கூறும்போது, இறந்தது பெண் யானை. சுமார் 20 வயது இருக்கலாம். வயது முதிர்வின் காரணமாக யானை இறந்திருக்கலாம் என்றார். 
முன்னதாக வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்கள் சிலர் இறந்து கிடந்த யானைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.
---------------

மேலும் செய்திகள்