திருக்கோவிலூர் அருகே 500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

திருக்கோவிலூர் அருகே 500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

Update: 2021-05-19 17:10 GMT
திருக்கோவிலூர்

கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிலர் சாராயம் காய்ச்சியும், மதுபாட்டில்களை பதுக்கி வைத்தும் விற்பனை செய்து வரும் சம்பவம் அரங்கேறி வருகிறது. இது போன்ற செயல்களில் ஈடுபடுவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் திருக்கோவிலூரை அடுத்த அரகண்டநல்லூர் போலீஸ் சரகத்துக்குட்பட்ட ஒட்டம்பட்டு கிராமம் மலையடிவாரம் அருகில் ஏரிக் கரையை ஒட்டி உள்ள வனப்பகுதியில் சமூக விரோதிகள் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தலைமையிலான போலீசார் ஒட்டம்பட்டு கிராமத்துக்கு சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர் அப்போது அங்குள்ள வனப் பகுதியில் 500 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்த போலீசார் அவற்றை தரையில் கொட்டி அழித்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி சாராய ஊறலை பதுக்கி வைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். சாராயம் காய்ச்சும் கும்பல் குறித்து பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்