அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதாக கடை உரிமையாளருக்கு 2 மடங்கு அபராதம் விதித்த மாநகராட்சி அதிகாரிகள்

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதாக கடை உரிமையாளருக்கு 2 மடங்கு அபராதம் விதித்த மாநகராட்சி அதிகாரிகள் வியாபாரிகள் குமுறல்.

Update: 2021-05-20 09:44 GMT
சென்னை,

கொரோனா ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. காலை 6 மணி முதல் 10 மணி வரை அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மட்டும் திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.

அந்த குறிப்பிட்ட நேரங்களிலும் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அரசு அறிவுறுத்தி இருக்கிறது. அதேபோல் குறிப்பிட்ட சில நேரங்களுக்கு பிறகு கடைகள் திறந்திருந்தால் அரசு தரப்பில் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஊரடங்கில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் கடைகள் மீது மாநகராட்சி அதிகாரிகள் பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி, அரசின் நெறிமுறைகளை மீறியதாக சென்னை திருவல்லிக்கேணியில் ஒரு எண்ணெய் கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

அதிலும், இரு மடங்கு அபராதம் விதிக்கப்பட்டு இருந்ததை கண்டதும் அந்த கடை உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார். இதேபோல் தான் அதிகாரிகள் சில கடை உரிமையாளர்கள் மீது கண்மூடித்தனமாக அபராதம் விதிப்பதாக வியாபாரிகள் சங்கம் சார்பில் புகார் எழுந்து இருக்கிறது.

மேலும் செய்திகள்