மணல் கடத்தல், மதுபான விற்பனையை தடுக்க நீடாமங்கலம் பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து தப்பி ஓடியவர்களுக்கு வலைவீச்சு

மணல் கடத்தல், மதுபான விற்பனையை தடுக்க நீடாமங்கலம் பகுதியில் தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது தப்பி ஓடிய நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2021-05-21 09:40 GMT
நீடாமங்கலம்,

திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் மற்றும் நீடாமங்கலம் போலீசார் நீடாமங்கலம் பகுதி ஆறுகளில் இருந்து மணல் கடத்தப்படுவதை தடுக்கவும், மது விற்பனையை தடுக்கவும் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது

நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை நடந்த இந்த ரோந்து பணியின் போது போலீசார் வருவதை முன்கூட்டியே அறிந்த மணல் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் தலைமறைவானார்கள். சிலர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மண் வெட்டிகளை கைப்பற்றினர்

மணல் கடத்தல் நடந்த பகுதிகளில் இருந்து சில மண்வெட்டிகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

கள்ளச்சந்தையில் மதுபானம் விற்றவர்களும் ேபாலீசார் ரோந்து வருவதை அறிந்து தலைமறைவாகி விட்டனர்.

மேலும் செய்திகள்