புஞ்சைபுளியம்பட்டியில் கொரோனா பரிசோதனைக்கு வந்த பெண் மூச்சுத்திணறி சாவு

புஞ்சைபுளியம்பட்டியில் கொரோனா பரிசோதனைக்கு வந்த பெண் மூச்சுத்திணறி இறந்தார்.

Update: 2021-05-21 20:55 GMT
கொரோனா தொற்று வேகமெடுத்து வருகிறது. இதனால் ஏராளமானோர் கொரோனா பரிசோதனை செய்தும், தடுப்பூசி போட்டும் வருகின்றனர். ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி சத்தி ரோட்டில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் கொரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் 27 பேர் தங்கி உள்ளனர்.  இங்கு புஞ்சைபுளியம்பட்டி ஜெ.ஜெ.நகர் பகுதியை சேர்ந்த 42 வயது பெண்ணும் கொரோனா பரிசோதனை எடுத்து தங்கியிருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதனையடுத்து அவரை புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி ஊழியர்கள் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் புளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதல்-உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலன் இன்றி அந்த பெண் நேற்று முன்தினம் நள்ளிரவில் பரிதாபமாக இறந்தார்.

மேலும் செய்திகள்