அன்னவாசல், விராலிமலை பகுதிகளில் முதியோர், ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய துணை போலீஸ் சூப்பிரண்டு

முதியோர், ஆதரவற்றோருக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு உணவு வழங்கினார்.

Update: 2021-05-24 18:23 GMT
அன்னவாசல்:
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பை தொடர்ந்து முழுஊரடங்கு நேற்று முதல் அமல் படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக அன்னவாசல் சுற்றுவட்டார பகுதிகளில் பஸ் நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் முதியவர்கள், ஊனமுற்றோர், ஆதரவற்றோர்கள் சிலர் உணவின்றி தவிப்பதாக வந்த தகவலையடுத்து தன்னார்வலர்கள் மூலம் காவல்துறை இணைந்து உணவுகள் தயார் செய்து பஸ் நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் தங்கியிருந்த முதியவர்கள், ஊனமுற்றோர்கள், ஆதரவற்றவர்கள் என அனைவருக்கும் இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) முத்தரசு உணவு பொட்டலங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை வழங்கினார். இதில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) விராலிமலை தாலுகா லஞ்சமேடு பகுதியில் ஆதரவற்ற முதியவர்கள் 2 பேருக்கு உணவு மற்றும் தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை வழங்கினார்.

மேலும் செய்திகள்