ரங்கநாத பெருமாள் கோவிலில் நரசிம்ம ஜெயந்தி சிறப்பு பூஜை

ரங்கநாத பெருமாள் கோவிலில் நரசிம்ம ஜெயந்தி சிறப்பு பூஜை

Update: 2021-05-25 17:37 GMT
பொள்ளாச்சி

ஆனைமலை பெரியகடை வீதியில் பழமையான ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில்  நரசிம்ம ஜெயந்தியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. 

இதை யொட்டி பால், தயிர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், இளநீர், தேன், கரும்புசாறு உள்ளிட்ட 9 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.  

வெட்டிவேர் மாலை, பூமாலைகளை கொண்டு பெருமாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. லட்டு, கல்கண்டு, மாம்பழம், வாழைப்பழம், எலுமிச்சை பழம், துளசி, அரளி வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

 கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் கோவில் அர்ச்சகர்கள், நிர்வாகிகள் மட்டும் கலந்துகொண்டனர். பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி அளிக்கவில்லை.

மேலும் செய்திகள்