கரூர் பகுதியில் உரங்கள், பூச்சிக்கொல்லி மருத்து விற்பனை கடைகள் திறப்பு

கரூர் பகுதியில் உரங்கள், பூச்சிக்கொல்லி மருத்து விற்பனை கடைகள் திறக்கப்பட்டது.

Update: 2021-05-27 18:09 GMT
கரூர் 
கொரோனா ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலையின் தாக்கம் தீவிரமாக அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில், மருத்துவமனைகள், மெடிக்கல், பால் விற்பனைநிலையங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுபோக்கு வரத்தும் தடைவிதிக்கப்பட்டு உள்ளது. 
கடைகள் திறப்பு
தற்போது விவசாயிகளின் தேவையை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள் உள்ளிட்டவை தங்கு தடையின்றி கிடைக்கும் வகையில் காலை 6 மணி முதல் 10 மணி வரை உரம், பூச்சி கொல்லி மருந்து கடைகள் நேற்று முதல் இயங்கும் எனறு தமிழக அரசு அறிவித்தது.
விவசாயிகள் ஆர்வம்
இதையடுத்து நேற்று காலை 6 மணி முதல் கரூர் நகரப்பகுதியில் உள்ள உரங்கள், பூச்சிக்கொல்லி  மருந்து விற்பனை கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடந்தது. இங்கு விவசாயிகள் வந்து தங்களது தேவையான விவசாய பொருட்களை வாங்கி சென்றனர். 

மேலும் செய்திகள்