கர்நாடக மாநிலத்தில் இருந்து தர்மபுரிக்கு மது கடத்தி வந்த 2 வாலிபர்கள் கைது 144 மது பாக்கெட்டுகள், கார் பறிமுதல்

கர்நாடக மாநிலத்தில் இருந்து தர்மபுரிக்கு மது கடத்தி வந்த 2 வாலிபர்கள் கைது 144 மது பாக்கெட்டுகள், கார் பறிமுதல்

Update: 2021-05-28 19:04 GMT
காரிமங்கலம்:
கர்நாடக மாநிலத்தில் இருந்து தர்மபுரிக்கு மது கடத்தி வந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 144 மது பாக்கெட்டுகள், கார் பறிமுதல் செய்யப்பட்டது.
வாகன சோதனை
கர்நாடக மாநிலத்தில் இருந்து தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வழியாக இருசக்கர வாகனம் மற்றும் கார் மூலம் மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக காரிமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைராஜ், சப்-இன்ஸ்பெக்டர் சபி மற்றும் போலீசார் நேற்று காரிமங்கலம் அருகே கும்பாரஅள்ளி சோதனைச்சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். 
அப்போது கிருஷ்ணகிரியில் இருந்து தர்மபுரி நோக்கி சென்ற கர்நாடக பதிவு எண் கொண்ட காரை போலீசார் நிறுத்தினர். பின்னர் அந்த காரை சோதனை செய்தபோது, சட்டவிரோதமாக கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்கள் வாங்கி கடத்தி வந்தது தெரியவந்தது. 
மது பாக்கெட்டுகள்
இதையடுத்து காரில் வந்தவர்களிடம் போலீசார் விசாரித்ததில் அவர்கள் காரிமங்கலம் அருகே மோதூரை சேர்ந்த பிரகாஷ் (வயது 27), வெற்றிவேல் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 10 மதுபாட்டில்கள், 144 மது பாக்கெட்டுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். ெதாடர்ந்து மது கடத்தி வந்த பிரகாஷ், வெற்றிவேல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் வந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது.
காரிமங்கலம் மோதூர் சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் தொடர்ந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
========

மேலும் செய்திகள்