தேனி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு 5 பேர் பலி

தேனி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு 5 பேர் பலியானார்கள்.

Update: 2021-05-30 17:06 GMT
தேனி :
தேனி மாவட்டத்தில் கொரோனா வைரசால் தினமும் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வைரஸ் தாக்குதலால் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 521 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மொத்தம் 35 ஆயிரத்து 893 ஆக உயர்ந்தது. பாதிக்கப்பட்டவர்களில் 689 பேர் நேற்று குணமாகி வீடு திரும்பினர். கொரோனா பாதிக்கப்பட்ட 6 ஆயிரத்து 355 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 
இந்நிலையில் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்ற 2 பெண்கள் உள்பட 5 பேர் நேற்று ஒரே நாளில் உயிரிழந்தனர். இது தவிர தேனி பகுதியை சேர்ந்த 72 வயது முதியவர் கொரோனா பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனாவால் தொடர்ந்து பலர் உயிரிழந்து வருவது மக்களிடையே அச்சத்தை அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள்