கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் படுக்கைகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு

கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் படுக்கைகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

Update: 2021-05-30 17:11 GMT
கூடலூர்,

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் ஆக்சிஜன் உள்பட மருத்துவ வசதிகள் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் சப்ளை குறித்து சென்னை ராணுவ பிரிகேடியர் சுப்பிரமணியம், ஸ்ரீகுமார் நடராஜன் ஆகியோர் நீலகிரி மாவட்டம் கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று காலை 10 மணிக்கு ஆய்வு நடத்தினர்.

அப்போது ஆக்சிஜன் உற்பத்தி மையம் தொடங்குவதற்கு போதிய இடவசதி உள்ளதா? என பார்வையிட்டனர். மேலும் மருத்துவ கட்டமைப்பு வசதிகள் எவ்வாறு உள்ளது? என தலைமை டாக்டர் புகழேந்தியிடம் விசாரித்தனர். பின்னர் பந்தலூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் கூடலூர் ஆர்.டி.ஓ. ராஜ்குமார், வன உரிமை அமர்வு அலுவலர் சிவக்குமார், பந்தலூர் தாசில்தார் தினேஷ் உள்பட வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்