ஒரே நாளில் 211 பேருக்கு கொரோனா; குணம் அடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 211 பேருக்கு கொரோனா ெதாற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. குணம் அடைந்தோரின் எண்ணிக்கை பாதிப்பை காட்டிலும் அதிகரித்து உள்ளது.

Update: 2021-05-30 18:18 GMT
சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 211 பேருக்கு கொரோனா ெதாற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. குணம் அடைந்தோரின் எண்ணிக்கை பாதிப்பை காட்டிலும் அதிகரித்து உள்ளது.

ஊரடங்கு

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் அதிகமாக காணப்பட்டது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் எடுத்த பல்வேறு நடவடிக்கை காரணமாக படிப்படியாக கொரோனா தொற்று குறைய தொடங்கியது.
தளர்வில்லா ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வெளியே கூடுவது தவிர்க்கப்பட்டு இருப்பதால் கொரோனா ெதாற்று படிப்படியாக குறைந்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். அதோடு கொரோனா பாதித்தவர்கள் உடனுக்கு உடன் சிகிச்சை பெற மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி தன்னார்வலர்கள் பலர் பொதுமக்களுக்கு எதிர்ப்பு சக்தி அளிப்பதற்காக கபசுர குடிநீர் உள்ளிட்டவைகளை வழங்கி வருகின்றனர்.

211 பேருக்கு கொரோனா

இந்த நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 211 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.அவர்கள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், அவருடன் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை இதுவரை 14 ஆயிரத்து 236 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை, மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 1,977 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். சமீப காலமாக கொரோனா பாதிப்பை காட்டிலும் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தோரின் எண்ணிக்கை உயர்ந்து உள்ளது.
நேற்று ஒரே நாளில் 256 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

மேலும் செய்திகள்