திசையன்விளையில் ஊரடங்கை மீறி ஊர் சுற்றியவர்களுக்கு கொரோனா பரிசோதனை

திசையன்விளையில் ஊரடங்கை மீறி ஊர் சுற்றியவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

Update: 2021-05-30 19:14 GMT
திசையன்விளை:

திசையன்விளை காமராஜர் பஸ்நிலையம் அருகில் நேற்று ஊரடங்கு உத்தரவை மீறி தேவை இல்லாமல் இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் ஊர் சுற்றியவர்களை போலீஸ் துணையுடன் அரசு ஆரம்ப சுகாதார நிலைய நடமாடும் மருத்துவ குழுவினர் மடக்கி பிடித்து கொரோனா பரிசோதனை செய்தனர்.

பின்பு அவர்களது செல்போன் எண்ணை பெற்றுக் கொண்டு பரிசோதனை முடிவுகளை அனுப்பி வைப்பதாக தெரிவித்தனர். சிலர் சோதனைக்கு பயந்து ஓட்டம் பிடித்தனர். இதனால் பஜாரில் வழக்கத்தை விட ஆள் நடமாட்டம் குறைவாக இருந்தது.

இதேபோல் மூலைக்கரைப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகபெருமாள் மற்றும் போலீசார் பஜார் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, ஊரடங்கை மீறி ஊர் சுற்றிய ஒருவரது மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் செய்திகள்