வங்கிக்கடன் மாத தவணைக்கு விதிவிலக்கு அறிவிக்காதது ஏன்? டி.டி.வி.தினகரன் கேள்வி

வங்கிக்கடன் மாத தவணைக்கு விதிவிலக்கு அறிவிக்காதது ஏன்? டி.டி.வி.தினகரன் கேள்வி.

Update: 2021-05-31 02:05 GMT
 சென்னை,

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இத்தனை நாட்கள் ஆன பிறகும் வங்கிக் கடன்களுக்கான மாத தவணையைச் (இ.எம்.ஐ.) செலுத்துவதற்கான விதிவிலக்குகள் குறித்து ரிசர்வ் வங்கி இதுவரை அறிவிக்காதது கண்டனத்துக்குரியது.

ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலன் கருதி இதனைச் செய்திட வேண்டிய மத்திய அரசும் வேடிக்கை பார்ப்பது நியாயமல்ல. இப்பிரச்சினையில் பிரதமரும், மத்திய நிதி மந்திரியும் உடனடியாக தலையிட வேண்டும்.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் ‘கடிதம் எழுதியதோடு கடமை முடிந்தது' என்று இல்லாமல் உரிய அழுத்தம் கொடுத்து ஊரடங்கு காலத்தில் வங்கிக்கடன் மாதத் தவணைகளிலிருந்து விலக்கு பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்