தூத்துக்குடி வட்டாரத்தில் 4 வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை

தூத்துக்குடி வட்டாரத்தில் 4 நடமாடும் வாகனங்களில் காய்கறி விற்பனை நடந்து வருகிறது.

Update: 2021-05-31 13:37 GMT
தூத்துக்குடி, ஜூன்:
தூத்துக்குடி வட்டாரத்தில் 4 நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை நடந்து வருகிறது.

வாகனங்களில் காய்கறி விற்பனை

தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன் ஆலோசனையின் பேரில் தூத்துக்குடி வட்டாரத்தில் கூட்டாம்புளி, கோரம்பள்ளம், உமரிக்கோட்டை, தளவாய்புரம் பகுதிகளை சேர்ந்த உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்கள் மூலம் 4 நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

இந்த நடமாடும் காய்கறி கடையை தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் (மாநில திட்டம்) பழனி வேலாயுதம், வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) சகாயமேரி, துணை வேளாண்மை அலுவலர் முத்துக்குமார் காளிராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

சுற்றுவட்டார விவசாயிகளின்...

இந்த நடமாடும் காய்கறி கடையில், தூத்துக்குடி சுற்று வட்டார விவசாயிகள் விளைவிக்கும் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த வாகனங்களில் விலைப்பட்டியல் தொங்க விடுவதற்கும், பொதுமக்கள் காய்கறி கடை வந்து இருப்பதை அறிந்து கொள்ளும் வகையில் ஒலி எழுப்பவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மேலும் பொதுமக்கள், விற்பனையாளர்கள் முககவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். நிகழ்ச்சியில் வட்டார தொழில்நுட்ப அலுவலர்கள் ஜெபக்குமார், செல்வக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள் மணிகண்டன், பாலகிருஷ்ணன், மீனாட்சி ஆகியோர் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்