தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை கொரோனா வார்டுக்குள் சென்று கிராம மக்களை சந்தித்த ஊராட்சி மன்ற தலைவர்

தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை கொரோனா வார்டுக்குள் ஊராட்சி மன்ற தலைவர் சென்று கிராம மக்களை சந்தித்தார்.

Update: 2021-05-31 15:46 GMT

சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ளது எர்ரணம்பட்டி கிராமம். இதன் ஊராட்சி மன்றத் தலைவராக ராஜேஷ் கண்ணன் உள்ளார். இந்த கிராம மக்கள் சிலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கிராம மக்களை சந்திக்க ராஜேஷ் கண்ணன் விரும்பினார். இதையடுத்து அவர் பாதுகாப்பு கவச உடை அணிந்து மருத்துவமனை அனுமதியின்பேரில் கொரோனா வார்டுக்கு நேரில் சென்று, அங்கிருந்த கிராம மக்களிடம் நலம் விசாரித்தார். 
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கொரோனா வார்டுக்குள் சென்று, சிகிச்சையில் இருந்த மக்களிடம் நலம் விசாரித்தது இந்தியா முழுவதும் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில், எர்ரணம்பட்டி கிராம ஊராட்சிமன்றத் தலைவரின் செயல், தேனி மாவட்ட மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அவரை பலர் பாராட்டி வருகின்றனர்.


மேலும் செய்திகள்