கள்ளச்சாராயம் காய்ச்சுவதை தடுக்க தமிழக-கேரள எல்லையில் போலீசார் தீவிர சோதனை

ஊரடங்கின்போது கள்ளச்சாராயம் காய்ச்சுவதை தடுக்க தமிழக-கேரள எல்லையில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

Update: 2021-05-31 15:52 GMT

கம்பம்:
கொரோனா வைரஸ் தொற்று 2-ம் அலையை தொடர்ந்து தமிழக, கேரள பகுதிகளில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஒருமாதகாலமாக இருமாநிலத்திலும் மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதை பயன்படுத்தி கொண்டு சிலர் தமிழக-கேரள எல்லையோரத்தில் உள்ள வனப்பகுதியில், சாராயம் காய்ச்ச வாய்ப்பு உள்ளது.  
இதையடுத்து தமிழக வனத்துறையினர், உடும்பன்சோலை கலால்துறை அதிகாரிகள், வண்டன்மேடு போலீசாருடன் இணைந்து கள்ளச்சாராயம் காய்ச்சுவதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி கம்பம் மேற்குவனச்சரகர் அன்பு தலைமையில் வனத்துறையினர், கேரள கலால்துறையினர் மற்றும் கேரள போலீசாருடன் இணைந்து நேற்று கம்பம் மெட்டு, மந்திப்பாறை, மூங்கிப்பள்ளம் உள்பட எல்லை வனப்பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினர்.


மேலும் செய்திகள்