தேவையின்றி வெளியே சுற்றினால் கடும் நடவடிக்கை

முழு ஊரடங்கின் போது தேவையின்றி வெளியே சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

Update: 2021-05-31 18:23 GMT
சிவகங்கை,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வருகிற 7-ந்தேதி வரை தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கின் போது தேவையின்றி வெளியே வாகனங்களில் சுற்றுபவர்கள் மீது கடு்ம் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். எனவே பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் எச்சரித்து உள்ளார்.

மேலும் செய்திகள்