வனத்துறை ஊழியர் கைது

வத்திராயிருப்பு அருகே 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் வனத்துறை ஊழியரை கைது செய்தனர்.

Update: 2021-05-31 19:18 GMT
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு அருகே 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் வனத்துறை ஊழியரை கைது செய்தனர். 
சாராயம் 
வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட கோட்டையூர் செட்டிகுறிச்சி கண்மாய் அருகில் உள்ள அய்யனார் கோவில் பகுதியில் தென்னந்தோப்பில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக வத்திராயிருப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 
இதனையடுத்து இன்ஸ்பெக்டர் சிவலிங்க சேகர் (பொறுப்பு) அப்பகுதியில் சோதனை நடத்த உத்தரவிட்டார். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். 
வனத்துறை ஊழியர் 
அப்போது அப்பகுதியில் சிலர் சாராய ஊறல் போட்டு சாராயம் காய்ச்சி கொண்டு இருந்தனர். 
அப்போது போலீசாரை கண்டவுடன் அங்கிருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். அதில் ஒருவரை மட்டும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். 
அப்போது கோட்டையூரை சேர்ந்த திருப்பதி ராஜா (வயது 30) என்பதும், வனத்துறை வேட்டை தடுப்பு பிரிவில் காவலாளியாக தற்காலிக பணியாளராக பணியாற்றி வருவதும் ெதரியவந்தது. 
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்து 10 லிட்டர் சாராயத்தையும் காய்ச்ச பயன்படுத்திய பொருட்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்