அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தனுஷ்குமார் எம்.பி. ஆய்வு

பாவூர்சத்திரம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தனுஷ்குமார் எம்.பி. ஆய்வு செய்தார்.

Update: 2021-05-31 21:02 GMT
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே அரியப்பபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை மேற்கொள்ள தனி வார்டு தொடங்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு சுமார் 25 பெண்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தனுஷ்குமார் எம்.பி., தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் ஆகியோர் மருத்துவ துறை அதிகாரிகளுடன் கொரோனா வார்டினை பார்வையிட்டனர். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தேவையான வசதிகள், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தனர்.

பின்னர் அரியப்பபுரம் பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் கல்லூரணி பஞ்சாயத்து செட்டியூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை தனுஷ்குமார் எம்.பி. தொடங்கி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் திலகராஜ்,  சுகாதார மேற்பார்வையாளர் இசக்கியப்பா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்