கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ரங்கசாமி, சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆலோசனை நடத்தினார்.

Update: 2021-06-01 11:01 GMT

ரங்கசாமி

புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி கடந்த 7-ம் தேதி பதவியேற்றார். அதைத் தொடர்ந்து அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படவே சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் குணமடைந்ததை தொடர்ந்து புதுவை திரும்பி தனது வீட்டில் தனிமை படுத்துக்கொண்டார். அதன்பின் அவ்வப்போது புதுவை சட்டசபைக்கு வந்து தனது அலுவலகத்தில் பணிகளை கவனித்து வருகிறார்.

ஆலோசனை

இந்த நிலையில் நேற்று அவர் கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறைச் செயலாளர் அருண், இயக்குனர் மோகன்குமார் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கொரோனா தொற்று பாதிப்பினை குறைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சைகளுக்கு தேவையான உபகரணங்கள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.

போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. சந்திப்பு

மேலும் போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. ஆனந்தமோகன், முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்துப் பேசினார். அப்போது அவர்கள் உயர் போலீஸ் அதிகாரிகளின் இடமாற்றம் குறித்து ஆலோசித்ததாக தெரிகிறது. இவர்கள் தவிர என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலரும் ரங்கசாமியை சந்தித்து பேசினார்கள். அப்போது அவர்கள் சபாநாயகர் பதவியை எக்காரணம் கொண்டும் பா.ஜ.க.வுக்கு தரக்கூடாது என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்