உலக பால் தின விழா

திண்டுக்கல்லில் ஆவின் தலைமை அலுவலகத்தில் உலக பால் தின விழா நடந்தது.

Update: 2021-06-01 15:26 GMT
திண்டுக்கல்: 

பால் உலகளாவிய ஒரு உணவு ஆகும். இதை உணர்த்தும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பால் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1-ந்தேதி உலக பால் தினம் கொண்டாடப்படுகிறது. 

இந்த உலக பால் தினம் கடந்த 2001-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய தலைமை அலுவலகத்தில் (ஆவின்), நேற்று உலக பால் தினம் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி வெண்மை புரட்சியின் தந்தை என அழைக்கப்படும் டாக்டர் வர்கீஸ் குரியனின் உருவ படத்துக்கு, பொதுமேலாளர் ராமநாதன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

இந்த நிகழ்ச்சியில் மேலாளர்கள், அலுவலக பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் கடந்த 1.4.1988 அன்று தொடங்கப்பட்டது.

தினமும் 192 சங்கங்கள் மூலம் 5 ஆயிரத்து 666 உறுப்பினர்களிடம் இருந்து 83 ஆயிரத்து 440 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. அதை ஒரு லட்சம் லிட்டராக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

மேலும் தினமும் 19 ஆயிரத்து 340 லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. மாதந்தோறும் ரூ.1 கோடிக்கு பால் உபபொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. 

தற்போது ஊரடங்கு காலமாக இருப்பதால் நடமாடும் வாகனங்கள் மூலம் நேடியாக பால் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் செய்திகள்