கொரோனாவுக்கு பலியான ஆசிரியர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்-முதல்-அமைச்சருக்கு கோரிக்கை

தேர்தல் பணியால் கொரோனாவுக்கு பலியான ஆசிரியர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டு உள்ளது.

Update: 2021-06-01 19:05 GMT
காரைக்குடி,

தேர்தல் பணியால் கொரோனாவுக்கு பலியான ஆசிரியர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டு உள்ளது.

 கோரிக்கை மனு

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் ரெங்கராஜன் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-
கொரோனா இரண்டாவது அலை நமது நாட்டை மிகக் கடுமையாக பாதித்துள்ளது. பெருந்தொற்றை எதிர்கொள்ள முன் களப்பணியாளர்கள் கடுமையான போராட்டத்தை தினந்தோறும் சந்தித்து வருகின்றனர். இதில் நாம் பலரை இழந்தும் இருக்கிறோம்.2021 சட்டமன்ற தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் ஆசிரியர்களை மிக அதிக அளவில் ஈடுபட செய்தது. வாக்குச்சாவடி நிலைய அதிகாரியாக பணி, தேர்தல் பயிற்சி வகுப்புகள், தேர்தல் பணி, வாக்கு எண்ணும் பணி ஆகியவற்றுக்கு முன்களப் பணியாளர்களாக நின்று தனது பணியை ஆசிரியர்கள் சிறப்பாக செய்தனர்.

ரூ.25 லட்சம் நிதி

ஆனால் அதன் பிறகு ஏராளமானோர் தொற்றுக்கு ஆளாகி தங்கள் உயிரை இழந்துள்ளனர். அவர்களை நம்பியுள்ள அந்த குடும்பத்தினர் மிகுந்த இழப்புக்கு ஆளாகியுள்ளனர். தமிழக முதல்வர், தேர்தல் பணியில் ஈடுபட்டு பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்கியும், அன்னாரது குடும்பத்தில் ஒருவருக்கு, அவரவர் கல்வித்தகுதிக்கு ஏற்ற வகையில் அரசுப்பணியில், முன்னுரிமை வழங்கி, ஆசிரியர் நலன், சமுதாய நலன், காத்து உதவிட பெரிதும் வேண்டுகிறோம்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்