ஆரம்ப சுகாதார நிலையங்களில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும்-கலெக்டர் தகவல்

சிவகங்கை மாவட்டத்திற்கு 4,500 டோஸ் தடுப்பூசி வந்துள்ளது. எனவே ஆரம்ப சுகாதார நிலையங்களில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்து உள்ளார்.

Update: 2021-06-02 17:20 GMT
சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்திற்கு 4,500 டோஸ் தடுப்பூசி வந்துள்ளது. எனவே ஆரம்ப சுகாதார நிலையங்களில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி ேபாடப்படும் என்று கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்து உள்ளார்.

தடுப்பூசி பற்றாக்குறை

கொரோனா பரவலை தடுக்க தற்போது தடுப்பூசி போடப்படுகிறது. ஆரம்பத்தில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.பின்னர் 2-வது கட்டமாக 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போட அரசு அனுமதியளித்தது. இதனால் சிவகங்கை மாவட்டத்தில் ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் சென்று தடுப்பூசி போட்டு கொண்டனர்.
மேலும் கோவேக்சின் தடுப்பூசி குறைந்த அளவு வந்ததால் ஏற்கனவே முதல் டோஸ் கோவேக்சின் தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு மட்டும் 2-வது டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. மேலும் புதிதாக போடுபவர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.தற்போது அதிக ஆர்வமுடன் சென்று பொதுமக்கள் தடுப்பூசி போடுவதால் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டது.

4,500 டோஸ் வந்துள்ளது

இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கனவே ஆயிரம் டோஸ் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. நேற்று மேலும் 4 ஆயிரத்து 500 டோஸ் தடுப்பூசி வந்துள்ளது. அதனால் இன்று (3-ந்தேதி) முதல் தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடப்படும்.
இன்று முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆகிய 2 பிரிவினர்களுக்கும் தடுப்பூசி போடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்