மணல் கடத்தலில் ஈடுபட்ட 6 தொழிலாளர்கள் கைது

தா.பழூர் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 6 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-06-03 19:50 GMT
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள தென்கச்சிபெருமாள்நத்தம் கிராம நிர்வாக அதிகாரி அசோக்குமார், தனது உதவியாளருடன் கீழகுடிகாடு கொள்ளிடம் ஆற்றுப் படுகையில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த மாட்டு வண்டிகளை நிறுத்தி, அதில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் கழுவந்தொண்டி கிராமத்தை சேர்ந்த குமார்(வயது 47), மனோகரன்(37), உத்திரகுடி கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி(63), வீரசேகர்(31), வேலன்(45), தேவாமங்கலம் கிராமத்தை சேர்ந்த மூர்த்தி(45) என்பதும், கொள்ளிடம் ஆற்றில் இருந்து அரசு அனுமதி பெறாமல் மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றி வந்ததும் தெரியவந்தது. இது குறித்து தா.பழூர் போலீசில் கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து மணல் கடத்தலில் ஈடுபட்ட 6 மாட்டுவண்டி தொழிலாளர்களையும் கைது செய்தார். 6 மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்