பரமத்திவேலூர் அருகே கொரோனா விதிகளை மீறிய பிரியாணி கடைக்கு 'சீல்'

பரமத்திவேலூர் அருகே கொரோனா விதிகளை மீறிய பிரியாணி கடைக்கு 'சீல்'

Update: 2021-06-05 03:41 GMT
பரமத்திவேலூர்:
பரமத்திவேலுார் அருகே வெங்கமேடு பகுதியில் உள்ள ஒரு பிரியாணி கடையில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை‌ மீறியும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் செயல்படுவதாக பரமத்திவேலூர் போலீசார் ‌மற்றும் பொத்தனூர் பேரூராட்சி நிர்வாகத்தினருக்கு தகவல் கிடைத்தது. 
அதன்பேரில் பரமத்திவேலுார் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாரணவீரன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன், பொத்தனூர் பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்ரமணியன், சுகாதார மேற்பார்வையாளர் ‌குணசேகரன், இளநிலை உதவியாளர் ஜெயசேகர் ஆகியோர் அங்கு சென்று விதிகளை மீறி இயங்கிய பிரியாணி கடைக்கு சீல் வைத்ததுடன், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர். மேலும் போலீசார் ஒலிபெருக்கி மூலம் சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும், முககவசம் அணிய வேண்டும் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் செய்திகள்