விதிமுறைகளை மீறி செயல்பட்ட கடைகளுக்கு அபராதம்

விதிமுறைகளை மீறி செயல்பட்ட கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2021-06-05 20:19 GMT
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வணிக நிறுவனங்கள் ஏதேனும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை திறந்து உள்ளதா? நகராட்சி மூலம் அனுமதி பெறாத கடைகள் ஏதேனும் விற்பனையில் ஈடுபடுகிறதா? முகக் கவசம் அணியாது, இ-பதிவு இல்லாமல் இருசக்கர வாகனங்களில் பயணிக்கின்றனரா? என்பது உள்ளிட்ட திடீர் சோதனைகள் செய்யப்பட்டது. அப்போது இருசக்கர வாகனத்தில் விதிமுறைகளை மீறி வந்தவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தும், அபராதம் விதித்தும் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் என்ற அளவை மீறி இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் வழங்கப்படுகிறதா? என்றும் ஆய்வு செய்யப்பட்டது. இது போன்ற விதிமுறைகளை மீறிய தனிநபர்களுக்கு 800 ரூபாயும், கடைகள் வணிக நிறுவனங்களுக்கு 4 ஆயிரத்து 500 ரூபாயும் என மொத்தம் 5,300 ரூபாய் அபராதம் விதித்து வசூல் செய்யப்பட்டது. இந்த ஆய்வின்போது நகராட்சி சுகாதார ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், வருவாய் உதவியாளர் சரஸ்வதி, மின் பணியாளர் சம்பத், குழாய் பொருத்துனர் ஜெயசீலன் மற்றும் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்