நோன்பிருந்து சிறப்பு தொழுகை நடத்திய முஸ்லிம்கள்

கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டி முஸ்லிம்கள் நோன்பிருந்து சிறப்பு தொழுகை நடத்தினர்.

Update: 2021-06-07 21:22 GMT
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வி.களத்தூர் மற்றும் மில்லத் நகரில் உள்ள பள்ளிவாசலை சேர்ந்த உலமாக்கள் மற்றும் ஜமாத் நிர்வாகிகள் ஒன்றிணைந்து அந்த பகுதியில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும், உலக மக்களை கொரோனா நோய் தொற்றில் இருந்து பாதுகாத்திட வேண்டி ஒரு நாள் நோன்பு வைத்து சிறப்பு தொழுகை நடத்துவதென முடிவு செய்தனர். அதன்படி முஸ்லிம்கள் தங்களது வீடுகளில் நேற்று நோன்பிருந்து தொழுகை நடத்தினார்கள். அதாவது காலை முதல் மாலை வரை சாப்பிடாமல் இருந்து தொழுகை நடத்தி மாலையில் பள்ளிவாசலில் வழங்கப்பட்ட நோன்பு கஞ்சியை சமூக இடைவெளியுடன் நின்று வாங்கி வந்து, தங்களது வீடுகளில் நோன்பு திறந்தனர். இந்த நோன்பில் இஸ்லாமிய சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்