தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு கடைகளில் பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்படதையடுத்து கடைகளில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.

Update: 2021-06-08 01:29 GMT
திருவள்ளூர்,

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கடந்த மாதம் 24-ந்தேதி முதல் 2 வாரங்களுக்கு எந்த ஒரு தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் பிறப்பிக்கப்பட்டது. அப்போது மளிகை கடை, காய்கறி கடை, டீக்கடை, வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

இதன் காரணமாக கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு பாதிப்பு படிப்படியாக குறைந்தது. இந்த நிலையில் நேற்று முதல் வருகி்ற 14-ந்தேதி வரை ஒரு வாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு அறிவித்தது.

பொதுமக்கள் குவிந்தனர்

அதில் காய்கறி கடை, மளிகை கடைகள், பழக்கடைகள், இறைச்சி மற்றும் மீன் கடைகள் போன்ற அத்தியாவசிய கடைகள் திறந்து இருக்கலாம் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து நேற்று திருவள்ளூர் பஜாரில் மளிகை மற்றும் காய்கறி கடைகள் திறக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் தங்கள் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க கடைகளில் குவிந்தனர். அதேபோல் மணவாளநகர், ஒண்டிகுப்பம், திருப்பாச்சூர், கடம்பத்தூர், பேரம்பாக்கம், கீழச்சேரி, மப்பேடு, பெருமாள்பட்டு, செவ்வாபேட்டை, திருமழிசை வெள்ளவேடு மற்றும் சுற்றுவட்டார் பகுதிகளிலும் கடைகள் திறக்கப்பட்டு பொதுமக்கள் முககவசம் அணிந்து தங்கள் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றதை காண முடிந்தது.

மேலும் செய்திகள்