அரசு உத்தரவை மீறி தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை வரும் வாகனங்கள்

அரசு உத்தரவை மீறி தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை வரும் வாகனங்கள்

Update: 2021-06-08 18:16 GMT
ராமேசுவரம்
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த ஏப்ரல் மாதம் 10-ம் தேதியில் இருந்து அனைத்து சுற்றுலா இடங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது அதுபோல் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை மற்றும் தனுஷ்கோடி கடற்கரை சாலை மற்றும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை அமலில் இருந்து வருகின்றது. இந்தநிலையில் தனுஷ்கோடி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட யாரும் செல்லக் கூடாது என்ற அரசின் உத்தரவு அமலில் உள்ள நிலையிலும் தினமும் ராமேசுவரம், தனுஷ்கோடி பல்வேறு வெளியூர் மற்றும் வெளி மாவட்டத்தில் இருந்தும் அரசு அதிகாரிகளின் குடும்பத்தினர் கார் உள்ளிட்ட வாகனங்கள் தனுஷ்கோடி அரிச்சல்முனை சாலை வரை அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
இதேபோல் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை நேற்றும் 4 பேருடன் வந்த கார் ஒன்று அரிச்சல்முனை வரை போலீசாரால் அனுமதிக்கப்பட்டது. அரசின் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டிய  அதிகாரிகளே இது போன்று விதிமுறைகளை மீறி தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை காவல்துறை அனுமதியுடன் சென்று வருவது ஏற்கத்தக்கது அல்ல. 
எனவே கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் வரையிலும் சுற்றுலா பயணிகள் கடற்கரை பகுதிக்கு அனுமதிக்கப்படாமல் இருப்பதுபோல் அரசு அதிகாரிகளின் குடும்பத்தினர் வரும் வாகனங்களும் தனுஷ்கோடி பகுதிக்கு சென்று வருவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்