நெல்லை, களக்காட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நெல்லை, களக்காட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-06-08 19:48 GMT
நெல்லை, ஜூன்:
நெல்லை, களக்காட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நெல்லை

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மாவட்ட செயலாளர் காசி விசுவநாதன் தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். உதவி செயலாளர் லட்சுமணன் முன்னிலை வகித்தார்.
கொரோனா தடுப்பூசி வயது வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் இலவசமாக போடவேண்டும். தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய சரக்கு சேவை வரி நிதியை உடனே வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை தினமும் உயர்த்துவதை கைவிட வேண்டும். செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும். பீடிக்கடைகளை உடனடியாக திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சடையப்பன், பரமசிவம், பாலகிருஷ்ணன் துர்க்கை முத்து, முத்துகிருஷ்ணன், சண்முகசுந்தர ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

களக்காடு

களக்காட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட குழு உறுப்பினர் சுகுமாரன் தலைமை தாங்கினார். ஒன்றிய பொறுப்பாளர் முருகன், நகர செயலாளர் முத்துவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் பெரும்படையார் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய துணை செயலாளர் பால்ராஜ், லெனின் முருகானந்தம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் பாலன், மோகன், திருமணி, முருகன், நம்பிராஜன், நடராஜன், பொன்னுத்துரை உளட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்