மணல் கடத்திய மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்; 5 பேர் மீது வழக்கு

மணல் கடத்திய மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2021-06-08 20:45 GMT
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள தென்கச்சி பெருமாள்நத்தம் கிராம நிர்வாக அதிகாரி அசோக்குமார் தனது உதவியாளருடன் தென்கச்சிபெருமாள்நத்தம் கொள்ளிடம் ஆற்றுப் படுகையில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது தா.பழூர் அருகே உள்ள பிள்ளையார்குளம் கிராமத்தை சேர்ந்த கர்ணன் (வயது 30), கார்த்திகேயன்(33), கீழசிந்தாமணி காமராஜர் நகரை சேர்ந்த சுந்தரமூர்த்தி(24), ராஜூ(31), தேவா(40) ஆகியோர் கொள்ளிடம் ஆற்றில் இருந்து அரசு அனுமதி பெறாமல் மோட்டார் சைக்கிள்களில் மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து தா.பழூர் போலீசில் கிராம நிர்வாக அதிகாரி அசோக்குமார் கொடுத்த புகாரின்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி வழக்குப்பதிவு செய்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 5 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தார்.

மேலும் செய்திகள்