கொரோனா பராமரிப்பு மையங்களில் கலெக்டர் ஆய்வு

கொரோனா பராமரிப்பு மையங்களில் கலெக்டர் ஆய்வு

Update: 2021-06-08 20:56 GMT
நாகர்கோவில்:
கருங்கல், அரசு மேல்நிலைப்பள்ளியில் கொரோனா பராமரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை மாவட்ட கலெக்டர் அரவிந்த் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களிடம் இருந்து சளி மாதிரி சேகரிப்பது குறித்து டாக்டர்கள் மற்றும் செவிலியர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா பராமரிப்பு மையத்தையும் கலெக்டர் அரவிந்த் நேரில் ஆய்வு செய்தார். அவருடன் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வருவாய் கூட்டரங்கில் நேற்று கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, பரிசோதனை மைய நிர்வாகிகளுடனான கலந்தாய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். பின்னர் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, டாக்டர்களுடனான கலந்தாய்வுக்கூட்டமும் கலெக்டர் தலைமையில் நடந்தது.

மேலும் செய்திகள்