பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம்

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2021-06-09 18:10 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சி  சப்-கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டம்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த கோவை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளுக்கு கண்காணிப்பு அதிகாரியாக சப்-கலெக்டர் வைத்திநாதன் நியமிக்கப்பட்டு உள்ளார். 

இந்த நிலையில் பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்-கலெக்டர் வைத்திநாதன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் பேரூராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகளுக்கு தேவைப்படும் உபகரணங்களை தன்னார்வலர்கள் மூலம் பெறுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் தணிகவேல், துணை தாசில்தார் ஜெயசித்ரா, தன்னார்வலர்கள் ரவீந்திரன், சந்திரசேகர் மற்றும் ஊர்க்காவல் படையினர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து சப்-கலெக்டர் வைத்திநாதன் கூறியதாவது:-

தெர்மல் ஸ்கேனர்

கோவை மாவட்டத்தில் உள்ள 37 பேரூராட்சிகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் காய்ச்சல், சளி உள்ளிட்ட தொந்தரவுகள் உள்ளதா? என்று தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

இந்த பணிக்கு ஆக்சிஜன் அளவை கண்டறிய பயன்படும் கருவி 3 ஆயிரம் தேவைப்படுகிறது. இதில் 100 கருவிகள் தன்னார்வலர்கள் மூலம் பெறப்பட்டு உள்ளது. இதேபோன்று 100 தெர்மல் ஸ்கேனர் கருவியும் பெறப்பட்டது. 

மேலும் சில தன்னார்வலர்கள் தேவையான உதவிகளை செய்து தருவதாக கூறி உள்ளனர். இதேபோன்று தன்னார்வலர்கள் உதவி செய்வதற்கு முன் வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்