வால்பாறையில் பலத்த மழை

வால்பாறையில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

Update: 2021-06-09 18:10 GMT
வால்பாறை,

கேரள மாநிலத்தில் கடந்த 4-ந் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழக-கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள வால்பாறை பகுதியிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டது. இதனால் நேற்று வால்பாறை பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.

வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைய தொடங்கிவிட்டதால் பரம்பிக்குளம் ஆழியார் திட்டத்தின் அணைகளாக விளங்கும் சோலையார் அணை, நீரார் அணை, சின்னக்கல்லார் அணை, பரம்பிக்குளம் அணை ஆகிய அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

மேலும் செய்திகள்