வெறிச்சோடிய சார்பதிவாளர் அலுவலகம்

பத்திரப்பதிவுக்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டாததால் சார்பதிவாளர் அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது.

Update: 2021-06-09 18:11 GMT
காரைக்குடி,
சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை உள்ளிட்ட சார்பதிவாளர் அலுவலகங்கள் அரசு அறிவித்த விதிமுறைப்படி இயங்க தொடங்கின.கொரோனா ஊரடங்கு காரணமாக பத்திரப்பதிவு செய்வதற்கு பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் இல்லை. இதனால் சார்பதிவாளர் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. இது குறித்து சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றும் ஒருவர் கூறியதாவது:-
இதற்கு முந்தைய காலக்கட்டத்தில் பொதுமக்கள் தங்களது பண தேவைக்காகவும், சொத்து வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் பத்திர பதிவு செய்வது வழக்கம். ஆனால் கடந்த ஒரு மாத காலமாக கொரோனா ஊரடங்கு காரணமாக வேலைவாய்ப்பு இல்லாமலும், வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டதாலும், சிறு தொழில்கள் முடங்கியதாலும் மக்களிடையே பணம் புழக்கம் வெகுவாக குறைந்து விட்டது. இதனால் மக்களிடையே பத்திர பதிவு செய்வதில் போதிய ஆர்வம் காட்டவில்லை. மீண்டும் பணப்புழக்கம் அதிகரித்தால் மட்டுமே பத்திரப்பதிவு அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்