போலீசார் தீவிர வாகன சோதனை

வத்திராயிருப்பு பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

Update: 2021-06-09 19:32 GMT
வத்திராயிருப்பு, 
வத்திராயிருப்பு பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். 
வாகன சோதனை 
 வத்திராயிருப்பு நகர்ப்பகுதிகளில் தமிழக அரசு அறிவித் துள்ள ஊரடங்கை செயல்படுத்தும் வகையில் இன்ஸ்பெக்டர் சுபக்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டியன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் பகுதி, ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். 
அப்போது ஊரடங்கை மதிக்காமல் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களை போலீசார் பிடித்து வாகனங்களை பறிமுதல் செய்து எச்சரித்து அனுப்பினர்.
அபராதம் 
அதேபோல முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர். .மேலும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் கார் மற்றும் வேன் ஆகியவற்றிற்கு இ-பதிவு உள்ளதா என போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.  
அத்தியாவசிய பணிகளுக்கு செல்லக்கூடிய சுகாதார பணியாளர்கள், வங்கி பணியாளர்கள் போன்ற பணிகளில் உள்ளவர்கள் அடையாள அட்டையை காண்பித்த பின்னரே அவர்களை அனுமதித்தனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை பின்பற்றும்படியும், அவ்வாறு பின்பற்றாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்தனர்.

மேலும் செய்திகள்