பொதுமக்களை அச்சுறுத்துபவர்கள் மீது நடவடிக்கை

பொதுமக்களை அச்சுறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கூறினார்

Update: 2021-06-09 21:57 GMT
தாமரைக்குளம்
அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் இடமாற்றம் செய்யப்பட்டு புதிய போலீஸ் சூப்பிரண்டாக பெரோஸ்கான் அப்துல்லா தமிழக அரசால் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து நேற்று அவர் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் 12-வது போலீஸ் சூப்பிரண்டாக பதவி ஏற்றுக் கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரியலூர் மாவட்டத்தில் ரவடியிசம், கட்ட பஞ்சாயத்து இருந்தால் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். சாராயம் காய்ச்சுதல், விற்றல், கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றால் அவர்கள் மீதும் நடவடிக்கை பாயும்.
 சட்டம்-ஒழுங்கை காக்க முன்னுரிமை அளிக்கப்படும். மாவட்டத்தில் உள்ள சிமெண்டு ஆலை கனரக வாகனங்களால் ஏற்படும் விபத்துகளை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்களை அச்சுறுத்தல் வகையில் நடந்து கொள்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் சுதந்திரமாகவும், அமைதியாகவும் வாழ்வதற்கான வழிமுறைகள் ஏற்படுத்தப்படும். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் சூப்பிரண்டுக்கு சக போலீஸ் அதிகாரிகள் வாழ்த்து கூறினர்.

மேலும் செய்திகள்