டெல்டாவில், 22 பேரின் உயிரை பறித்த கொரோனா - ஒரே நாளில் 1,396 பேருக்கு தொற்று

டெல்டாவில், 22 பேரின் உயிரை கொரோனா பறித்துள்ளது. ஒரே நாளில் 1,396 பேருக்கு தொற்று உறுதியானது.

Update: 2021-06-10 14:04 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 7 லட்சத்து 60 ஆயிரத்து 923 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று 5 ஆயிரத்து 836 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 685 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்து 268 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 814 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 47 ஆயிரத்து 868 பேர் குணம் அடைந்துள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 53, 54, 62, 62, 65, 65, 76 வயதுடைய 7 ஆண்கள் பலியானார்கள். இதன்மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 590 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 6,810 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாகை மாவட்டத்தில் நேற்று மேலும் 422 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 972 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 600 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 29 ஆயிரத்து 190 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 30, 40, 69, 74 வயதுடைய 4 பெண்களும், 60, 69, 70, 74 வயதுடைய 4 ஆண்களும் என 8 பேர் பலியானார்கள். இதன்மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 417 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 4,365 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 289 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 962 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 700 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 30 ஆயிரத்து 21 பேர் குணம் அடைந்துள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 55, 75, 75 வயதுடைய 3 பெண்களும், 46, 57, 65, 76 வயதுடைய 4 ஆண்களும் என 7 பேர் பலியானார்கள். இதன்மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 255 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 3,686 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்