அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2021-06-10 17:15 GMT
வேலாயுதம்பாளையம்
தளவாப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் அமாவாசையையொட்டி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதேபோல் வேலாயுதம்பாளையம், நாணப்பரப்பு, கடம்பங்குறிச்சி மாரியம்மன் கோவில், தோட்டக்குறிச்சி மலையம்மன் கோவில், மண்மங்கலம் புதுகாளியம்மன் கோவில் உள்பட பல்வேறு அம்மன் கோவில்களிலும் அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. 

மேலும் செய்திகள்