கருப்பு பூஞ்சை நோய்க்கு ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் பலி

திருக்கடையூர் அருகே கருப்பு பூஞ்சை நோய்க்கு ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் பலியானார்.

Update: 2021-06-10 17:28 GMT
திருக்கடையூர்:
திருக்கடையூர் அருகே கருப்பு பூஞ்சை நோய்க்கு ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் பலியானார்.
ஊராட்சி மன்ற தலைவியின் கணவர்
மயிலாடுதுறை மாவட்டம் பிள்ளைபெருமாநல்லூர் ஊராட்சி மன்ற தலைவி தீபா. இவருடைய கணவர் முனுசாமி(வயது 48). இவர் கடந்த மாதம் 26-ந் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்றார். 
இந்த நிலையில் முனுசாமிக்கு வலது கண்ணில் பார்வை குறைபாடு ஏற்பட்டதுடன் வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக கடந்த 8-ந் தேதி தஞ்சை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். 
கருப்பு பூஞ்சை நோய்க்கு சாவு
பரிசோதனையில் முனுசாமிக்கு கருப்பு பூஞ்சை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 
இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். சுகாதாரத்துறையின் மூலம் பிள்ளை பெருமாநல்லூர் ஊராட்சியில் முனுசாமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
கடந்த மாதம் 25-ந் தேதி முனுசாமியின் தந்தை உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். தந்தை இறந்த 16-வது நாளில் மகன் முனுசாமி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்