ஜவுளிக்கடை ஊழியர்கள், வாடிக்கையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை

காரைக்குடியில் மூடிய நிலையில் இயங்கிய ஜவுளிக்கடை ஊழியர்கள், வாடிக்கையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடந்தது.

Update: 2021-06-10 18:01 GMT
காரைக்குடி,

காரைக்குடியில் ஒரு ஜவுளி கடையில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி வியாபாரம் செய்வதாக நகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற நகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்கள் கடையின் உள்ளே சென்று அங்கிருந்த 20-க்கும் மேற்பட்ட கடையின் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை வெளியே வரவழைத்து அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்தனர். அதன் பின்னர் அந்த பரிசோதனையில் அனைவருக்கும் கொரோனா தொற்று இல்லை என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ஜவுளிக்கடை அடைக்கப்பட்டது. கொரோனா விதிமுறை மீறிய கடை உரிமையாளரை சுகாதாரத்துறை அலுவலர்கள் எச்சரித்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்