ஊரடங்கு காலத்தில் ஆர்ப்பாட்டம் 46 பேர் மீது வழக்கு

ஊரடங்கு காலத்தில் ஆர்ப்பாட்டம் 46 பேர் மீது வழக்கு

Update: 2021-06-10 19:12 GMT
கோவை

கொரோனா காலத்தில் உயிரிழக்கும் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண தொகையாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் சந்திரன் தலைமையில் கோவை பி.என்.புதூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு உரிய அனுமதி பெறவில்லை என்பதாலும், ஊரடங்கு காலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் இதில் கலந்து கொண்ட 21 பெண்கள் உள்பட 46 பேர் மீது தொற்று நோய் பரவல் தடுப்பு சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்