சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூரில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-06-10 20:28 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூரில், மாவட்ட சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் அகஸ்டின் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், கொரோனா தடுப்பூசி உற்பத்தியை மத்திய அரசு விரைவுபடுத்த வேண்டும். கொரோனா வைரஸ் தீவிரத்தை கட்டுப்படுத்திட மருத்துவமனைகளில் போதுமான மருத்துவ படுக்கைகள், ஆக்சிஜன் மற்றும் பிற மருத்துவ வசதிகளை உறுதி செய்திட வேண்டும். ஊரடங்கு காலத்தில் வேலையிழப்பு, ஊதியவெட்டு ஆகிய தொழிலாளர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திட வேண்டும். கொரோனா ஊரடங்கினால் தவித்து வரும் வருமான வரி வரம்பிற்குள் இல்லாத குடும்பங்களுக்கு மாதம் ரூ.7 ஆயிரத்து 500 வழங்கிட வேண்டும். அடுத்த 6 மாதங்களுக்கு அனைவருக்கும் 10 கிலோ உணவு தானியங்களை மத்திய அரசு இலவசமாக வழங்கிட வேண்டும். அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்ட பணியாளர்களை முன்களப்பணியாளர்களாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்