வாடகைக்கு சரக்கு வாகனம் அனுப்புவதாக கூறி ரூ.30 ஆயிரம் மோசடி செய்தவர் கைது

சென்னை கிண்டி, வாடகைக்கு சரக்கு வாகனம் அனுப்புவதாக கூறி ரூ.30 ஆயிரம் மோசடி செய்தவர் கைது செய்தனர்.

Update: 2021-06-11 04:24 GMT
ஆலந்தூர், 

சென்னை கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர் கார்த்திகேயன் (வயது 45). இவர் தான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் பொருட்களை வெளியூர்களுக்கு கொண்டு செல்ல வாடகைக்கு வாகனம் வேண்டி ஆன்லைனில் விளம்பரம் செய்து இருந்தார். அதை பார்த்த மாமல்லபுரத்தில் உள்ள ஒரு நிறுவனத்தை சேர்ந்தவர், தங்களிடம் 2 சரக்கு வாகனம் இருப்பதாகவும், அதற்கான வாடகை தொகை ரூ.30 ஆயிரத்தை அனுப்பும்படியும் கூறியிருந்தார்.

இதனை நம்பிய கார்த்திகேயன், ரூ.30 ஆயிரத்தை அவர் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பியதாக தெரிகிறது. ஆனால் அதன்பிறகு சரக்கு வாகனம் ஏதும் அனுப்பாமல் பணத்தை மோசடி செய்து தன்னை ஏமாற்றியதால் அந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீசில் கார்த்திகேயன் புகார் செய்தார்.

அதன்பேரில் கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அது போலி நிறுவனம் என்பது தெரியவந்தது. அந்த நிறுவனத்தை நடத்தி பணம் மோசடி செய்ததாக கொசப்பேட்டையை சேர்ந்த ஜெயகுமார் (48) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்